Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Editorial / 2024 மே 21 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிகிச்சைக்கு வந்த கல்லூரி மாணவியை துணியை அவிழ்க்க கூறி அத்துமீற முயன்ற மருத்துவரை, அந்த மாணவியின் குடும்பத்தினர் தர்ம அடி கொடுத்து புரட்டி எடுத்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் அங்கிருக்கும் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இதனிடையே, அந்த மாணவி கடந்த வாரம் தனது வீட்டு மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் அவரது இடுப்பில் அடிபட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் ரங்கநாதன் தெருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அந்த மாணவி சிகிச்சைக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த பிசியோதெரபி மருத்துவர் சந்தோஷ் குமார் (32), அந்த மாணவிக்கு சிகிச்சை என்ற பெயரில் தொடக்கூடாத சில இடங்களில் தொட்டு இருக்கிறார். மாணவியும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஆயிற்றே என்று அமைதி காத்துள்ளார். ஒருகட்டத்துக்கு மேல், அவரது துணிகளை கழற்றுமாறு மருத்துவர் சொல்லி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவி, அந்த பிசியோதெரபி மருத்துவர் சந்தோஷ் குமாரை கன்னத்தில் அறைந்துவிட்டு வெளியே வந்துள்ளார்.
பின்னர் தனது உறவினர்களிடம் இதுபற்றி சொல்லி அழுதிருக்கிறார் அந்த மாணவி. இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் அங்கு வந்து மருத்துவர் சந்தோஷ்குமாரை சரமாரியாக தாக்கினர். இதனால் சட்டை கிழிந்து ரத்தம் வழியபடி வெளியே ஓடி வந்த அவரை துரத்தி பிடித்த உறவினர்கள் அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். பின்னர் அவரை விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் மாணவியின் உறவினர்கள் ஒப்படைத்தனர். காயம் அதிகமாக இருந்ததால் அவரை கைது செய்து, உடனடியாக அவரை அரசு மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்தனர். மேலும், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago