2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

சம்பல் பகுதியில் புதிய மோதல்

Freelancer   / 2025 மார்ச் 16 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தர பிரதேச சம்பல்வாசிகளுக்கு இடையே ஜாமியா மசூதிக்கு எந்த வண்ணம் பூசுவது என்பதில் புதிய மோதல் துவங்கியுள்ளது. 

இதில், முஸ்லிம் தரப்பு பச்சை நிறமும், இந்து தரப்பு காவி நிறமும், அரசு நிர்வாகம் வெள்ளை நிறமும் பூச வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த மசூதிக்கு ஒவ்வொரு ஆண்டும் ரமழான் பண்டிகைக்காக வண்ணம் பூசுவது வழக்கம். இதற்கு சம்பல் மசூதி கமிட்டிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இதனால், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு மசூதி கமிட்டி மனு அளித்தது. இதற்கான அனுமதியை அளித்த நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால், மசூதியின் வெளிப்புறத்தில் மட்டும் வண்ணம் பூச இந்திய தொல்லியல் துறைக்கு (ஏஎஸ்ஐ) உத்தரவிட்டார்.

இச்சூழலில், எந்த நிறத்தில் வண்ணம் பூசுவது என்பதில் புதிய மோதல் துவங்கியுள்ளது.

 இப்பிரச்சினையில் சம்பல் மாவட்ட ஆட்சியர் ராஜேந்தர் பன்சியா கூறுகையில், "நீதிமன்ற உத்தரவின்படி மசூதிக்கு வண்ணம் பூசப்படுகிறது.

எனவே நீதிமன்றத்தில் மனு செய்து உத்தரவு பெறுவதே சரியாக இருக்கும். பச்சை, காவி ஆகிய 2 நிறத்துக்கும் பொதுவாக வெள்ளை நிறத்தை பூசலாம் என நீதிமன்றத்தில் கூறுவோம்" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .