2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

சபரிமலையில் மீண்டும் ஸ்பாட் புக்கிங் வசதி அறிமுகம்

Freelancer   / 2024 நவம்பர் 04 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மண்டல பூஜை, மகர விளக்கு காலத்தையொட்டி, பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், சபரிமலையில் மீண்டும் ஸ்பாட் புக்கிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இந்த ஆண்டு மண்டல பூஜை டிசம்பர் 26ஆம் திகதியும், மகர விளக்கு பூஜை வருகிற ஜனவரி 14ஆம் திகதியும் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் கேரள மாநில அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மண்டல பூஜை, மகர விளக்கு காலத்தையொட்டி, பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் சபரிமலையில் மீண்டும் ஸ்பாட் புக்கிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

பம்பை, எருமேலி, பீர்மேடு ஆகிய இடங்களில் ஸ்பாட் புக்கிங் மையங்கள் செயல்படும் என்றும், ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

ஒன்லைனில் முன்பதிவு செய்யும் 70 ஆயிரம் பக்தர்கள் தினசரி அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X