2024 டிசெம்பர் 04, புதன்கிழமை

சந்திரபாபு நாயுடுவுக்கு முத்தம் கொடுக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

Freelancer   / 2024 நவம்பர் 03 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண் ஒருவர் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு முத்தம் கொடுக்க முயன்ற வீடியோ சமூக வலைதளங்களை தற்போது பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அனக்கா பள்ளி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், சனிக்கிழமை (2), அனக்காபள்ளி மாவட்டத்தில் உள்ள பரவாடா என்ற இடத்தில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தனது வாகனத்தில் ஏறுவதற்காக சென்றார். அப்போது பரவாடாவை சேர்ந்த பெண் ஒருவர் பூங்குத்துடன் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க முயன்றார். 

சந்திரபாபு நாயுடுவின் பாதுகாவலர்கள் பூச்செண்டு கொடுக்க வந்த பெண்ணை முதல் மந்திரியிடம் நெருங்க விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனைக் கண்ட சந்திரபாபு நாயுடு அந்தப் பெண்ணை விடுவிக்குமாறு தெரிவித்தார்.

சந்திரபாபு நாயுடுவிடம் வந்த பெண் தன்னிடம் இருந்த பூங்கொத்தை அவரிடம் கொடுத்தார். அப்போது திடீரென சந்திரபாபு நாயுடுவுக்கு அந்த பெண் முத்தம் கொடுக்க பலமுறை முயற்சி செய்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சந்திரபாபு நாயுடு பணிவுடன் மறுப்பு தெரிவித்தார். மாறாக, பெண்ணை தன்னுடன் போட்டோ எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கினார்.

பூங்கொத்து கொடுத்த பெண் சந்திரபாபு நாயுடுவுடன் செல்பி எடுத்துக் கொண்டார். பின்னர் சந்திரபாபு நாயுடு தனது வாகனத்தில் ஏறி புறப்பட்டு சென்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .