Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Freelancer / 2024 மே 23 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரளாவில் அடுத்தாண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் வார்டுகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக வார்டுகளை மறு வரையறை செய்யும் வகையில் கேரள பஞ்சாயத்து ராஜ் சட்டம், கேரள நகராட்சி சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்ய அவசர சட்டத்தை கேரள அரசு கொண்டு வந்தது.
இதற்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்து, மாநில ஆளுநரின் அனுமதிக்காக கடந்த செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்தது. இந்த அவசர சட்டத்தை கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் நேற்று திருப்பி அனுப்பினார்.
தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால், தேர்தல் ஆணையத்தின் அனுமதி இல்லாமல் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என விளக்கம் அளித்துள்ள ஆளுநர் ஆரிப் முகமதுகான், அவசர சட்டத்தை கேரள தலைமை செயலாளருக்கு திருப்பி அனுப்பினார்.
இது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
7 hours ago