2024 டிசெம்பர் 30, திங்கட்கிழமை

கூகுள்-பேயில் இலஞ்சம் வாங்கியவர் கைது

Freelancer   / 2024 ஒக்டோபர் 10 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரளா-கொல்லம் மாவட்டம், கருநாகப்பள்ளி பகுதியில்,கூகுல் பே மூலம் இலஞ்சம் பெற்ற வைத்திய அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இடுக்கி மாவட்ட வைத்திய அதிகாரியாக பணியாற்றிய மனோஜ் (வயது52) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

மூணாறு,சித்திராபுரம் பகுதியில் செயற்பட்டுவரும் ஒரு ரிசார்ட்தகுதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தது. 

 

அதற்கு தகுதி சான்றிதழ் வழங்குவதற்கு குறித்த வைத்திய அதிகாரி 1 இலட்சம்  ரூபாய் இலஞ்சம் கோரியுள்ளார்.

 

இதையடுத்து, குறித்த ரிசார்ட்டின் மேலாளர், குறித்த அதிகாரியை சந்தித்து பேசி 75ஆயிரம் ரூபாய் தருவதாக கூறினார். அதற்கு சம்மதம் தெரிவித்த வைத்திய அதிகாரி,அந்த பணத்தை தனது தனிப்பட்ட சாரதிக்கு 'கூகுள்-பே மூலமாக அனுப்புமாறு கூறியிருக்கிறார்.

 

அதன்படி அனுப்புவதாக கூறிய ரிசார்ட் மேலாளர், அதுபற்றி இலஞ்ச ஒழிப்பு பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, கூறியதன்பேரில், குறிப்பிட்ட நேரத்துக்கு வைத்திய அதிகாரியின் சாரதியின் அலைபேசி எண்ணுக்கு'கூகுள்-பே' மூலமாக ரிசார்ட் மேலாளர் பணத்தை அனுப்பினார்.

 

அப்போது வைத்திய அதிகாரியின் அலுவலகத்தில் மறைந்திருந்த இலஞ்ச ஒழிப்பு பொலிஸார்,  குறித்த வைத்திய அதிகாரியையும் அவரது சாரதியையும் கைது செய்தனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X