2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

குழந்தையின் பாலினத்தை பார்க்க மனைவியின் வயிற்றை கிழித்த கொடூரன்

Editorial   / 2024 ஜூன் 06 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது மனைவின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை பார்ப்பதற்காக வயிற்றை கிழித்து இருக்கிறார் இந்த கொடூர கணவன். இதில், வயிற்றில் இருந்த ஆண் குழந்தை பரிதாபமாக இறந்து இருக்கிறது. இந்நிலையில், இந்த கொடூர செயலில் ஈடுபட்டவருக்கு தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம், உத்திர பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் குழந்தையின் பாலினத்தை பார்க்கும் முறை தடை செய்யபட்டு இருக்கிறது. எனினும், சட்டவிரோதமாக பல மருத்துவமனைகள் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை பெற்றோர்களுக்கு சொல்லி வருகிறது. இப்படி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுவரும் மருத்துவமனைகள் மீது உரிய அதிகாரிகள் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில், உத்திர பிரதேச மாநிலத்தில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை சரிபார்க்க 8 மாத கர்ப்பிணி மனைவியின் வயிற்றை அறுத்து இருக்கிறார் கொடூர கணவன். இந்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி சவுரப் சக்சேனாவின் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது.

 

அன்று புடானில் உள்ள சிவில் லைன்ஸ் பகுதியில் பன்னா லால் (46) தனது மனைவிக்கு மீண்டும் பெண் குழந்தை பிறக்கும் என ஒரு பூசாரி கூறியதை தொடர்ந்து இப்படியான செயலில் ஈடுபட்டு இருக்கிறார். இந்த தம்பதிக்கு ஏற்கெனவே 5 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். மீண்டும் பெண் குழந்தை பிறக்கும் என பூசாரி கூறியதால் அதை உறுதி செய்யும் விதமாக அவரது மனைவி அனிதா தேவியின் வயிற்றை அரிவாளால் கிழித்து பார்த்ததாக கூறப்படுகிறது.


இந்த சம்பவத்தை அடுத்து அனிதாவை டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் புடான் பொலிஸார் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் அவரது உயிரைக் காப்பாற்றினர். ஆனால், கணவர் வயிற்றைக் கீழித்ததில் கருவில் இருந்த ஆண் சிசு உயிரிழந்து இருக்கிறது. அந்த வகையில், பன்னா லால் கொலை முயற்சி மற்றும் பெண்ணின் அனுமதியின்றி கருச்சிதைவு ஏற்படுத்துதல்ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .