2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

குளிர்சாதனப்பெட்டி வெடித்து விபத்து; இருவர் உயிரிழப்பு

Freelancer   / 2024 செப்டெம்பர் 12 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுரையில் மகளிர் விடுதியில் குளிர்சாதனப்பெட்டி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த நிலையில், விடுதியின் உரிமையாளரை பொலிஸார் கைது செய்தனர்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்ராபாளையம் தெருவில் தனியார் மகளிர் தங்கும் விடுதி செயல்படுகிறது. இவ்விடுதியில் 40க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி பணி மற்றும் கல்வி பயின்று வருகின்றனர். இந்த சூழலில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் விடுதியில் உள்ள குளிர்சாதனப்பெட்டி வெடித்து வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில், விடுதி முழுவதும் கரும்புகை சூழந்தது.

இதனால், விடுதியில் தங்கி இருந்த சுமார் 5 பெண்களுக்கு இலேசான காயங்களும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர். மேலும், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கிருந்து மீட்கப்பட்ட பெண்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இரண்டு பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இருவரும் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், விடுதியில் தங்கியிருந்த பெண்களை மாற்று இடத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து, பொலிஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், விடுதியின் உரிமையாளரை பொலிஸார் கைது செய்தனர்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .