2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

’கில்லியன் பேர் சிண்ட்ரோம்’ நோய்: ஒருவர் பலி

Freelancer   / 2025 ஜனவரி 27 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாராஷ்டிராவில், 'கில்லியன் பேர் சிண்ட்ரோம்' நோய் பாதிப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழிந்திருப்பதாக முதற்கட்ட மருத்துவ ஆய்வுகள் அடிப்படையில் சந்தேகிக்கப்படுகிறது. 

இதற்கிடையில், புனேவில், இந்நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது.

 மகாராஷ்டிராவின் சோலாபூர் மாவட்டத்தில், இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. குறிப்பிட்ட அந்த நபர் தனிப்பட்ட வேலைகளுக்காக சொந்த கிராமத்துக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சளி, இருமல் தொந்தரவு ஏற்பட்டு பின்னர் மூச்சுத் திணறல் ஆகியுள்ளது. 

அதற்காக ஜனவரி 18ஆம் திகதி சோலாப்பூரில் ஒரு தனியார் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலில் தீவிர சிகிச்சை பிரிவிலும் பின்னர் வார்டிலும் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். ஆரம்பத்தில் உடல்நலம் தேறியுள்ளது. பின்னர் மீண்டும் மூச்சித் திணறல் ஏற்பட அவர் தீவிரசிகிச்சை பிஇவில அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழப்பதற்கு முன்னர் அவருக்கு பக்கவாதமும் ஏற்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .