Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 23, சனிக்கிழமை
Freelancer / 2024 ஒக்டோபர் 16 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், 10 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி ஆட்சி திரும்பப்பெறப்பட்டு, உமர் அப்துல்லா தலைமையிலான என்சிபி அரசு, நேற்று புதன்கிழமை ஆட்சியமைத்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 8ஆம் திகதி எண்ணப்பட்டன. இதில் பெரும்பான்மை இடங்களை பிடித்து தேசிய மாநாடு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதற்கிடையே 4 சுயேட்சைகள் மற்றும் 1 இடத்தில் வென்ற ஆம் ஆத்மி என்சிபி கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, ஜனாதிபதி ஆட்சி திரும்பப்பெறப்பட்டு உமர் அப்துல்லா தலைமையிலான என்சிபி அரசு நேற்று புதன்கிழமை ஆட்சியமைத்துள்ளது.
ஸ்ரீநகரில் உள்ள சேர்-இ-காஷ்மீர் இன்டர்நேஷனல் கான்வென்டின் சென்டர் (SKICC) இல் வைத்து நேற்று புதன்கிழமை காலை 11.30 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீரில் 10 வருடங்களுக்குபிறகு அரசு அமைத்துள்ளது. உமர் அப்துல்லாவை தொடர்ந்து மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்கவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago