Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 ஒக்டோபர் 22 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ காலையில் இருந்து விரதமிருந்த மனைவி, மாலையில் கணவரை விஷம் வைத்து கொன்ற சம்பவமொன்று, உத்தர பிரதேசம் மாநிலம் கௌசாம்பி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஷைலேஷ் குமார் (வயது 32) என்பவர் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
கர்வா சவுத் பண்டிகையின் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை (19), குறித்த நபரின் நீண்ட ஆயுளுக்காக, அவரது மனைவி பிரார்த்தனை செய்ய விரதம் இருந்துள்ளார்.
இதனிடையே, கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக மனைவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து மாலையில் விரதத்தை முடித்து குறித்த நபரிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது.
அதன்பின்னர் சமாதானம் ஆனது போல் மனைவி பாசாங்கு செய்து, உணவில் விசம் கலந்து கணவருக்கு பரிமாறியுள்ளார்.இதில் கணவர் உயிரிழந்துள்ளார் சந்தேகநபரான மனைவி அங்கிருந்து தலைமறைவாகி உள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
39 minute ago
2 hours ago
2 hours ago