Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Mayu / 2024 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர் 27 வயதான நவீன் அப்பகுதியில் துணிக்கடை ஒன்று வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களாக அதே பகுதியைச் சேர்ந்த லிகிதா என்னும் 19 வயதான பெண்ணை காதலித்து வந்தநிலையில்வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
07ம் திகதி காலை நவீனுக்கும் திருமணம் நடந்துள்ளது. பின்னர் லிகிதாவின் வீட்டிற்குச் சென்ற புதுமண தம்பதிகள் சிறிது நேரம் உறவினர்களுடன் பேசி விட்டு பின் தங்கள் அறைக்குச் சென்றுள்ளனர்.
அவர்கள் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் லிகிதா அலறும் சத்தம் கேட்டுள்ளது. என்ன நடக்கிறது என்று புரியாத உறவினர்கள் கதவை தட்ட வெகு நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாமல் இருக்கவே ஜன்னல் வழியே பார்த்தபோது லிகிதா மற்றும் நவீன் கத்தியால் தாக்கப்பட்டு காயங்களுடன் தரையில் கிடந்துள்ளனர்.
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட லிக்கிதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் நவீனுக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதமே இதற்கு காரணம் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், வியாழக்கிழமை 08ஆம் திகதி சிகிச்சை பலனின்றி நவீனும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது,
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .