2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

காணிக்கை எண்ணும் பணியில் கைவரிசை காட்டிய பெண்கள் கைது

Freelancer   / 2024 ஜூலை 01 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை எண்ணுவதற்கு கோயில் பொறுப்பு அதிகாரி இணை ஆணையர் முன்னிலையில் 150க்கும் மேற்பட்ட கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள், கோயில் தற்காலிக பணியாளர்கள் ஆகியோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய இந்தப் பணியில் காலை 9.30 மணிக்கு இரண்டு பெண் பணியாளர்கள் கோயில் உண்டியல் பணம் எண்ணும் பொழுது அந்தப் பணத்தை எடுத்து மறைப்பது போல் சி.சி.டி.வி ???ட்சியில் பதிவாகியுள்ளது.

இதனைத் கோயில் அதிகாரிகள் கவனித்து அவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் திருடியதை உறுதி செய்துள்ள நிலையில் உடனடியாக திருத்தணி காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த திருத்தணி பொலிஸார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருத்தணி முருகன் கோயிலில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வரும் வைஜெயந்தியிடமும்,  திருக்கோயிலில் நாதஸ்வரம் வாசிக்கும் நிரந்தர பணியாளர் தேன்மொழியிடமும் விசாரணை நடத்தினர். 

இருவரும் உண்டியல் பணம் எண்ணும் பொழுது திருடிய பணத்தை வைஜெயந்தியுடன் சேர்ந்து மலைக்கோவில் கழிவறைக்கு சென்று தங்களது உள்ளாடையில் மறைத்து வைத்துள்ளதை உறுதி செய்த பொலிஸார் இருவரையும் கைது செய்தனர்.

பின்னர் இந்த இரண்டு பெண் பணியாளர்களிடமிருந்தும் ரூபாய் 1,15790 இலட்சம் பணம் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் திருத்தணி முருகன் கோயில் பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் எத்தனை நாள் இது போல் திருடி உள்ளனர் என்றும் திருத்தணி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .