Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 ஓகஸ்ட் 06 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
காசி விஸ்வநாதர் கோவில் அருகே இரண்டு வீடுகள் இடிந்து தரைமட்டமானதில் ஒருவர் பலியான நிலையில், இடிபாடுகளில் சிக்கிய 8 பேரை மீட்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
உத்தரபிரதேசம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் அருகே 2 வீடுகள் இன்று (06) இடிந்து தரைமட்டமாகியதில் இடிபாடுகளில் 8 பேர் சிக்கினர். இதன்போது, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் பொலிஸார் மீட்பு பணியில் ஈடுபட்டனதில் 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். மேலும், மீட்பு பணியின் போது, காயமடைந்த ஒரு பொலிஸ்காரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 8 பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்பதால், அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், கனமழை காரணமாக, வீடு இடிந்து விழுந்துள்ளது என மீட்புப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .