2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

களைகட்டும் சேவல் பந்தயம்

Freelancer   / 2025 ஜனவரி 16 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களில், கடந்த 3 நாட்களாக சேவல் பந்தயம் நடந்து வருகிறது.

ஆண்கள் மட்டுமின்றி இளம் பெண்களும் சேவல் மீது பந்தயம் கட்டினர். சில பெண்கள் காய்கறி வாங்கும் பைகளில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகளை எடுத்து வந்து பந்தயத்தில் ஈடுபட்டனர். சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ. 50 இலட்சத்தை பந்தயம் கட்டி இழந்தார். பின்னர் சூதாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் ரூ 5 இலட்சத்தை வென்றார். 

அமலாபுரத்தில் நடந்த பந்தயத்தில் சேவல் ஒன்று ரூ.1.20 கோடியை வென்று அசத்தியது.

பேரா வலி அடுத்த கந்தவள்ளியில் நடந்த சேவல் பந்தயத்தை காண வந்த வாலிபர் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். மற்றொரு வாலிபர் சேவல் பந்தயத்தில் பணத்தை இழந்ததால் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

 சேவல் சண்டை நடந்த இடங்களில் கடந்த 3 நாட்களாக மதுபான கடைகள் இரவு பகல் பாராமல் திறக்கப்பட்டு இருந்தன. இதனால் மது மற்றும் மாமிச விருந்து நடைபெற்றது.

மேலும், தெலுங்கானாவை சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர், சேவல் பந்தயம் நடத்தும் அமைப்பாளர்கள் தன்னிடம் ரூ.7 இலட்சத்தை மோசடி செய்ததாக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, சேவல் சண்டை நடந்த இடங்களில் கண்ணாடிகளை உடைத்து காரில் இருந்த இலட்சக்கணக்கான ரூபாய் கொள்ளை அடித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மட்டும், கடந்த 3 நாட்களில் ரூ. 1,500 கோடிக்கு சண்டையில் பந்தயம் நடந்ததாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .