2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கல்குவாரியில் பாறைகள் சரிந்து 10 பேர் உயிரிழப்பு

Freelancer   / 2024 மே 28 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மிசோரம் மாநிலம் ஐஸ்வால் மாவட்டத்தில் கனமழை காரணமாக கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் சிக்கியுள்ள நிலையில் அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

 

இந்தியாவின் கிழக்குப் பகுதியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய ரெமல் புயல், மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷ் கடற்கரைகளுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கரையைக் கடந்தது. இந்நிலையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மிசோரம் மாநிலம் ஐஸ்வால் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்று இடிந்து விழுந்தது.

இதில் 10 பேர் உயிரிழந்ததுடன், பலர் சிக்கியுள்ள நிலையில் அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாலும் தேடும் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மிசோரமில் புயல் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதுடன், வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி அரசு ஊழியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதனிடையே, அடுத்த இரண்டு நாட்களுக்கு அசாம் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .