2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

கர்நாடகா பொருட்களில் கன்னடம் கட்டாயம்

Freelancer   / 2025 மார்ச் 03 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடகாவில் தயாரித்து விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான பொருட்களிலும் கன்னட மொழியில் அதன் பெயர் கட்டாயம் இடம்பெற வேண்டும் என, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் மார்ச் 1ஆம் திகதி முதல், கர்நாடகாவில் தனியார் சார்பில் தயாரித்து விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களின் அட்டைகளிலும் கன்னடத்தில் அதன் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும்,தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பொருட்கள், நுகர்வோர் பயன்படுத்தும் அன்றாட பொருட்கள் ஆகியவற்றில் கன்னட மொழி இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

இதனை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .