2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

கர்நாடகாவில் மோட்டார் சைக்கிள் சேவைக்கு தடை

Freelancer   / 2025 ஏப்ரல் 03 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைக் டாக்ஸி சேவையை 6 வாரங்​களுக்கு கர்​நாட​கா​வில் நிறுத்தி வைக்குமாறு,உயர்​ நீ​தி​மன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரேபிடோ, ஓலா, உபேர் போன்ற தனி​யார் பைக் டாக்ஸி நிறு​வனங்​களின் கூட்​டமைப்பு, கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவையை அனு​ம​திக்கக்கோரி உயர்​ நீ​தி​மன்​றத்​தில் வழக்கு தொடுத்தது.

இந்த மனுவை, புதன்கிழமை (2) நீதிபதி ஷியாம் பிர​சாத் விசாரித்து, ‘‘பைக் டாக்ஸி சேவைக்கு விதி​முறை​களை உரு​வாக்​கு​மாறு கர்​நாடக அரசுக்கு உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இதற்​காக 3 மாதங்​கள் கால‌ அவகாசம் வழங்​கப்​பட்​டுள்​ளது. அதுவரை பைக் டாக்ஸி சேவையை 6 வாரங்களுக்கு கர்​நாட​கா​வில் நிறுத்த வேண்​டும். அதற்​குள் அரசு சட்ட திருத்​தத்தை மேற்​கொள்ள வேண்​டும்​ என உத்​தரவிட்​டார்​.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X