Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 மே 12 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் வாகனங்கள் மிதந்து சென்றன.
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. ஆறு, அணை, குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் வற்றியுள்ளது.
ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் இல்லை, இதனால் மாநிலம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத சூழல் நிலவியது.
இந்நிலையில், கடந்த 4 நாட்களாக மாலை நேரங்களில் பெங்ளுரில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து கர்நாடகாவின் பல மாவட்டங்களில் நேற்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலை முதலே ஹூப்ளி, தார்வாட், சிக்கமங்களூர், விஜயபுர உள்ளிட்ட பகுதிகளில் வெயில் வாட்டிவதைத்த நிலையில், மாலை நேரத்தில் திடீரென கனமழை பெய்தது, இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
குறிப்பாக ஹூப்ளியில் ஒருமணி நேரம் இடி மின்னலுடன், கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள பெரும்பாலான சாலைகள் ஆறாக மாறி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது, கடைகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது.
சாலைகளில் மூன்று அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பல பகுதிகளில் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன.
இதனால் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வெயில் வாட்டி வதைத்த நிலையில், மழை மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் மற்றொருபுறம் மக்கள் பெரும் இன்னலுக்கும் ஆளாக்கியுள்ளனர்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
3 hours ago