2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

காது குத்த மயக்க ஊசி செலுத்தியதால் 6 மாத சிசு பலி

Freelancer   / 2025 பெப்ரவரி 05 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடகாவில், 6 மாத சிசுக்கு காது குத்துவதற்காக மயக்க ஊசி செலுத்தியதால், உடல் நிலை பாதிக்கப்பட்டு அந்த சிசு உயிரிழந்தது.

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் குண்டுலுபேட்டையை அடுத்துள்ள ஷெட்டிஹள்ளியை சேர்ந்தவர் ஆனந்த் (32). தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு ஆண் சிசு பிறந்தது. அந்த சிசுக்கு நேற்று முன்தினம் (3) காது குத்தும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

காது குத்தும் போது வலி தெரியாமல் இருப்பதற்காக ஊசி செலுத்த‌ பொம்மல்லாப்புரா அரசு வைத்தியசாலைக்கு சிசுவை அழைத்து சென்றார். அங்கிருந்த வைத்தியர் நாகராஜூ இரு காதுகளின் மடல்களிலும் மயக்க மருந்து ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு கட்டணமாக அவர், ரூ.200 பெற்றுள்ளார்.

6 மாத சிசுக்கு அதிக வீரியம் நிறைந்த மயக்க ஊசி செலுத்தியதால் சிசு உடனடியாக மயங்கியது. மேலும் அதன் வாயில் நுரை தள்ளியது. இதையடுத்து வைத்தியர் நாகராஜூ குண்டுலுபேட்டை அரசு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார். அங்கு சிசுவை பரிசோதித்த வைத்தியர்கள், சிசு ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, ஷெட்டிஹள்ளி வைத்தியசாலையை முற்றுகையிட்டு, வைத்தியர் நாகராஜூ மீது நடவடிக்கை எடுக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த குண்டுலுபேட்டை பொலிஸார், வைத்தியர் நாகராஜூ மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன‌ர்.

மருத்துவர் விளக்கம்: மயக்கவியல் வைத்தியர் தனசேகரன் கூறுகையில், ‘‘குழந்தைகளுக்கு காது குத்தும் போது தூங்குவதற்கு மருந்து அல்லது மயக்க மருந்து கொடுப்பது இயல்பான ஒன்று தான். பல இடங்களில் அப்படி தான் குழந்தைகளுக்கு காது குத்தப்படுகிறது. மருந்து கொடுப்பதில் அளவு உள்ளது. அளவுக்கு அதிகமான மயக்க மருந்து கொடுத்தால் பிரச்சினை ஏற்படும்’’ என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .