2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

கணவரை நீரில் மூழ்கி எடுத்த மனைவி

Freelancer   / 2025 பெப்ரவரி 26 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணவர் வீடியோ கோலில் இருந்த போது, கும்பமேளாவில் மனைவி தனது அலைபேசியை தண்ணீரில் நனைத்து நனைத்து எடுத்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 மகா கும்பமேளாவில் புனித நீராட நேரில் வர முடியாதவர்கள் புகைப்படங்களவ அனுப்பினால் அதனை நீரில் நனைப்பதாகவும் அதனால் புண்ணியம் சேரும் எனவும் இதற்காக 1,100 ரூபாய் கட்டணம் வசூலிப்பதாகவும் தெரிவிக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதன்பிறகு, மகா கும்பமேளா தண்ணீரை உத்தரபிரதேச மாநிலங்களில் உள்ள சிறைச்சாலைக்கு கொண்டு சென்று அங்குள்ள 90 ஆயிரம் கைதிகளை புனித நீராட வைத்தனர். 

மகா கும்பமேளா புனித நீர் இணையத்தளங்களில் கூட விற்பனை செய்யப்படுகிறது.

 இந்த நிலையில் மகா கும்பமேளாவுக்கு சென்ற  பெண் ஒருவர்,  புனித நீராடிய நிலையில் அவருடைய கணவரால் வர முடியவில்லை. இதனால் அவருடைய கணவர் வீடியோ கோல் செய்த போது, அப்படியே அலைபேசியை தண்ணீரில் 3 முறை மூழ்கி எடுத்தார். 

அப்பெண் நீரில் அலைபேசியை நனைத்து எடுக்கும் வீடியோ வைரலாகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X