Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 02, புதன்கிழமை
Freelancer / 2025 மார்ச் 02 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 1ஆம் திகதிக்கு பின் பிறந்தவர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்த) சட்டம் கடந்த 2023ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கடவுச்சீட்டு வழங்குதல், கல்வி நிறுவன சேர்க்கை, ஓட்டுநர் உரிமம் வழங்குதல், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருமண பதிவு, அரசு பணி நியமனம், ஆதார் எண் வழங்குதல் ஆகியவற்றுக்கு, ஒரு நபரின் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடத்துக்கு ஆதாரமாக பிறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என இந்த சட்டம் கூறுகிறது.
இதன் அடிப்படையில் பாஸ்போர்ட் (திருத்த) விதிகள், 2025, அரசிதழில், வெள்ளிக்கிழமை (28) வெளியிடப்பட்டது.
இதுதொடர்பாக வெளியிடப்படிருந்த அறிக்கையில்,
"கடந்த, 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 1ஆம் திகதிக்கு பிறகு பிறந்தவர்கள், புதிதாக கடவுச்சீட்டு பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயமாகிறது. மாநகராட்சி, நகராட்சி போன்றவை அல்லது அதற்கு நிகரான அமைப்புகள் வழங்கும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் மட்டுமே பிறப்பு சான்றிதழ் ஆவணமாக ஏற்கப்படும்.
“அரசிதழில் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், கடந்த 2023, ஒக்டோபர் 1க்கு முன்பு பிறந்தவர்கள், பிறப்பு சான்றிதழ் இல்லாவிட்டால் வழக்கம்போல பிறந்த திகதிக்கான ஆவணமாக மாற்று ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
5 hours ago