2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

ஒரேநாளில், 8,000 கோழிகள் உயிரிழப்பு

Freelancer   / 2025 மார்ச் 04 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெலங்கானாவில், ஒரேநாளில், 8,000 கோழிகள் உயிரிழந்துள்ளன. 

ஆந்திராவின் கிருஷ்ணா, கோதாவரி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பண்ணை கோழிகள் கடந்த மாதம் உயிரிழந்தன. பறவை காய்ச்சலே இதற்கு காரணம் என இரத்தப் பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த மாவட்டங்களில் பண்ணை கோழிகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, தமிழகம், கர்நாடகா, தெலங்கானாவிலும் ஆந்திராவின் கோழிகள் விற்பனை ஆகவில்லை. 

 தெலங்கானா மாநில எல்லைகளில் 24 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து ஆந்திர மாநில கோழிகளை தெலங்கானாவுக்குள் அனுமதிக்காமல் தடுத்தனர். ஆனாலும், தெலங்கானா மாநில எல்லையில் கம்மம் மாவட்டத்தில் கடந்த மாதம் பறவை காய்ச்சல் பரவியது.

இதைத் தொடர்ந்து, வாரங்கல், நல்கொண்டா, சூர்யாபேட்டை, மேதக் உள்ளிட்ட மாவட்டங்களில் பறவை காய்ச்சலால் பண்ணை கோழிகளின் உயிரிழப்பு அதிகரித்தது. இந்நிலையில், திங்கட்கிழமை (3) சங்காரெட்டி, மேதக் மாவட்டங்களில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8,000 பண்ணைக் கோழிகள்  உயிரிழந்தன. இப்பகுதிகளில் கோழிக்கறி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், இறந்த கோழிகளின் இரத்தம், பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .