2024 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை

ஒரே நாளில் இரு முறை பதவியேற்ற அமைச்சர்

Freelancer   / 2024 ஜூலை 08 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்த ராம்நிவாஸ் ராவத் என்ற எம்.எல்.ஏ., ஒரே நாளில் இரு முறை அமைச்சர் பதவி ஏற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ம.பி., மாநிலம் விஜய்பூர் தொகுதி எம்.எல்.ஏ., ராம்நிவாஸ் ராவத். காங்கிரசின் செயல் தலைவராக பதவி வகித்தார். சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார். அதேநேரத்தில் எம்.எல்.ஏ., பதவியை அவர் இன்னும் இராஜினாமா செய்யவில்லை.

இந்நிலையில், இன்று காலை 9 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் இணை அமைச்சராக பதவியேற்ற அவருக்கு கவர்னர் மங்குபாய் படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆனால், அடுத்த 15 நிமிடங்களில் மீண்டும் அவர் கேபினட் அமைச்சராக பதவியேற்றார்.

முதலில் பதவியேற்ற ராம் நிவாஸ் ராவத், தவறுதலாக பதவி ஏற்றதால் அவர் மீண்டும் பதவியேற்றார் என தெரியவந்துள்ளது. இது குறித்து அவர் கூறும் போது, முதலில் பதவியேற்ற போது ஒரு வார்த்தையை தவற விட்டு விட்டதால், மீண்டும் பதவியேற்று கொண்டதாக கூறினார்.

மேலும், ஒரே நாளில் இரண்டு முறை அவர் பதவியேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள அதேசமயம், காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஆக இருந்து கொண்டு அவர் எப்படி பா.ஜ., அமைச்சரவையில் இடம்பெற முடியும் என கேள்வி எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .