2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இளம்பெண் வன்கொடுமை

Freelancer   / 2024 ஓகஸ்ட் 28 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இளம்பெண் ஒருவரை வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதில் சம்பந்தப்பட்ட சிறுவர்கள் இருவரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது பற்றி மேலும் தெரியவருகையில், மத்திய பிரதேசம் மாநிலம் ஷதோல் மாவட்டத்தில் 18 வயது இளம்பெண் ஒருவர் அந்த பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் வாடகை வீட்டின் உரிமையாளரின் மகனான சிறுவன், குறித்த இளம் பெண், வீட்டில் தனியாக இருக்கும் போது அவருக்குத் தெரியாமல் கைபேசியில் புகைப்படம் எடுத்துள்ளார். பின்பு அதனை ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் ஆபாசமாகச் சித்தரித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஆபாசமாகச் சித்தரித்த புகைப்படத்தை இளம்பெண்ணிடம் காட்டி அவரை மிரட்டியுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணை, தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

மேலும் சிறுவன் தனது நண்பனான மற்றொரு சிறுவனுடன் சேர்ந்து இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்நிலையில், நடந்த சம்பவம் குறித்து இளம்பெண் கோத்வாலி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .