Freelancer / 2024 ஜூலை 03 , பி.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் பல மாநிலங்களில், மாட்டிறைச்சி வைத்திருந்ததாக அடித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் அவ்வவ்போது அரங்கேறி வருகின்றன. அப்படியான ஒரு கொடூரச் சம்பவம்தான் ராஜஸ்தான் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து பதிண்டாவுக்கு எலுமிச்சைப் பழங்களை ஏற்றியபடி டிரக் ஒன்று, கடந்த ஜூன் 30ஆம் திகதி சென்றது. அன்று இரவு, ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தின் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லாசெடி சுங்கச்சாவடி அருகே ஜீப் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த பசு காவலர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர், அந்த டிரக்கை வழிமறித்து அதில் இருந்த இரண்டு பேரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். மாடுகளை கடத்திச் சென்றதாகக் கூறி, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவமறிந்த பொலிஸார் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்த இணையத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், அவர்கள் இருவரும் தரையில் படுத்திருக்கும் நிலையில், தடிகளை ஏந்திய ஒரு கும்பல் மீண்டும் மீண்டும் தாக்குவதை காட்சிகள் காட்டுகின்றன. மேலும், அவர்களின் முகத்தில் செருப்பால் அடித்ததுடன், தலையில் எட்டி உதைப்பதும் தெரிகிறது.
இதற்குமுன் கடந்த ஜூன் 16ஆம் தேதி ஹரியானாவில் இறைச்சிக் கடை ஒன்றில் பசு காவலர்கள் நடத்திய சோதனையில் கோழிக்கறி வாங்க வந்த மூன்று பேர் காயமடைந்தனர். அடுத்து, ஜூன் 15 அன்று, ஹரியானாவின் மேவாட் கிராமத்தில் கால்நடைகளை படுகொலை செய்ததாகக் கூறி துப்பாக்கி ஏந்திய காவலர்கள் இரண்டு ஆண்களைத் தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.S
3 hours ago
4 hours ago
7 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
14 Dec 2025