Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை
Freelancer / 2024 ஒக்டோபர் 10 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுச்சேரியில், ஜிப்மர் வைத்தியசாலையில், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு, வைத்தியசாலை நிர்வாகத்துக்கு, எம்.பி. பெயரில் மின்னஞ்சல் வந்துள்ளது.
இதையடுத்து, 100க்கும் மேற்பட்ட பொலிஸார் தீவிர சோதனை நடத்தியதில் இது போலி வெடிகுண்டு மிரட்டல் எனதெரியவந்துள்ளது.
2ஆவது நாளாக வந்த மின்னெஞ்சலில், பிரெஞ்சு தூதரகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்தது.
அங்கும் சோதனை நடத்தியதில் அதுவும் போலி என தெரியவந்தது. குறித்த மின்னஞ்சல் தொடர்பில் புதுவ. பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எம்.பி. பெயரில் வந்துள்ள மின்னஞ்சல் கணக்கு அனைத்தும் போலியானது எனவும் அவை வெளிநாட்டில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில்இருந்து தெரியவந்துள்ளது.
ஜிப்மர் வளாகத்துக்கும் பிரெஞ்சு தூதரகத்துக்கும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
21 Dec 2024