2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

எச்.ஐ.வி பாதிப்பில் 828 மாணவர்கள்

Freelancer   / 2024 ஜூலை 10 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

திரிபுரா மாநிலத்தில் 800க்கும் மேற்பட்ட பாடசாலை, கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், 47 மாணவர்கள் எய்ட்ஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

திரிபுரா மாநிலத்தில் 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் ஊசி மூலம் செலுத்திக்கொள்ளும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாக புகார் கொடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் நடைபெற்ற சோதனையில் 828 மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இத்தொற்றினால் பாதிக்கப்பட்ட 47 மாணவர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புகாருக்கு உள்ளான 220 பாடசாலைகள் மற்றும் 24 கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் பலர் போதைக்கு அடிமையாகியிருப்பதும் தெரியவந்துள்ளது. ஒரே ஊசி மூலம் பலர் போதை மருந்தை உடலில் செலுத்திக்கொள்வதால் எச்.ஐ.வி பரவியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X