Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 நவம்பர் 04 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தர பிரதேச மாநிலம் அல்மோரா மாவட்டத்தில், இன்று (4) காலை 9 மணியளவில், சுமார் 40 பேருடன், சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 28 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் அல்மோராவில் உள்ள மார்ச்சுலாவின் சால்ட் பகுதியில் பஸ் சென்றபோது, திடீரென பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கவும், காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கவும் பொலிஸார், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும், "பஸ் விபத்து ஏற்பட்ட 28 பேர் உயிரிழந்தது செய்தி மிகவும் கவலையளிக்கும் செய்தி. துரித மீட்புப்பணிக்கு உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
12 minute ago
23 minute ago