2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

உத்தர பிரதேசத்தில் கலவரம்: பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

Freelancer   / 2024 நவம்பர் 25 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தர பிரதேச மாநிலம், சம்பல் நகரில் உள்ள முகலாயர் காலத்​தில் கட்டப்​பட்ட ஜமா மசூதியை ஆய்வு செய்ய சென்றபோது அதிகாரி​களுக்​கும், உள்ளூர் மக்களுக்​கும் இடையே மோதல் ஏற்பட்​டது.

இது கலவரமாக மாறியதில் 3 பேர் உயிரிழந்​தனர். 30 பொலிஸார் காயமடைந்​தபேர்.

இந்த நிலையில், அப்பகுதியில் நேற்று (25), பாடசாலைகளுக்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கலவரத்தைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பல் பகுதியில், 24 மணி நேரத்துக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் கற்கள், சோடா பாட்டில்கள் அல்லது வெடிக்கக் கூடிய பொருட்களை வாங்கவோ பதுக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. 

சம்பல் பகுதிக்குள் வெளியாட்கள், சமூக அமைப்புகளைச் சார்ந்தோர், மக்கள் பிரதிநிதிகள் முன் அனுமதியின்றி வரக்கூடாது எனவும் தடை விதித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், சம்பல் நகரில் ஜமா மசூதி கட்டப்​படு​வதற்கு முன்பாக அந்த இடத்​தில் இந்து கோவில் இருந்​த​தாக​வும், எனவே அந்த இடத்​தில் ஆய்வு நடத்தி உண்மை தன்மையை சரிபார்க்க கோரியும் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. 

இதையடுத்து, அந்த மசூதி​யில் ஆய்வு நடத்த நீதி​மன்றம் உத்தர​விட்டது. இதைத்​தொடர்ந்து, தொல்​லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்​கொள்​வதற்காக சம்பல் பகுதி​யில் உள்ள ஜமா மசூதிக்கு, ஞாயிற்றுக்கிழமை (24) காலை சென்றனர்.

அப்போது, அங்கு கூடி​யிருந்த மக்கள், மசூதி​யில் ஆய்வு நடத்து​வதற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​தனர். இருப்​பினும், நீதி​மன்ற உத்தர​வின் அடிப்​படை​யில் மசூதியை ஆய்வு செய்​வ​தில் அதிகாரிகள் உறுதியாக இருந்​தனர். 

இதையடுத்து, அந்த பகுதி​யில், போராட்​டக்​காரர்​களுக்​கும், பாது​காப்பு பணியில் ஈடுபட்​டிருந்த பொலிஸாருக்​கும் இடையே மோதல் வெடித்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .