2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

உணவுப் போட்டியால் பறிபோன உயிர்

Freelancer   / 2024 செப்டெம்பர் 15 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாலக்காட்டில் நடத்தப்பட்ட உணவு உண்ணும் போட்டியின் போது, லொரி டிரைவர் ஒருவர் தொண்டையில் இட்லி சிக்கி, உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி மேலும் தெரியவருகையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு, பாலக்காட்டில் கொல்லப்புரா இளைஞர்கள் குழு ஒன்று, சாப்பாடு போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதிகமான இட்லி சாப்பிடுவோருக்கு பரிசு வழங்கப்படும் என போட்டியை நடத்தும் குழுவினர் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இதில் கிடைக்கும் பரிசுக்கு ஆசைப்பட்டு பாலக்காடு பகுதியை சேர்ந்த லொரி டிரைவர் சுரேஷ் அவசர அவசரமாக இட்லியை சாப்பிட்டுள்ளார்.

அப்போது அவரது தொண்டையில் இட்லி சிக்கியது. போராடியும் இட்லியை விழுங்க முடியவில்லை. இந்நிலையில் அவர், மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தார்.

இது குறித்து சுள்ளிமடை வார்ட் உறுப்பினர் மின்மினி என்பவர் கூறுகையில், “சுரேஷ் ஒரேநேரத்தில் மூன்று இட்லிகளை ஒன்றாக விழுங்க முயன்றார். அப்போது இட்லி தொண்டையில் சிக்கியது. மூச்சுவிட முடியாமல் திணறினார்.

உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கிருந்து வாளையாறில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். சுரேஷ் லொரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். பொலிஸார் இயற்கைக்கு மாறான மரணம் என இதை வழக்கு பதிவு செய்துள்ளனர்” என்று அவர் கூறினார்.

இந்நிலையில், இத்தகைய போட்டிகளை நடத்துவோர் மீதும், அதற்கு அனுமதி கொடுக்கும் அதிகாரிகள் மீதும் கடுமையான குற்றப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்டவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X