2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

இறந்ததாக அறிவிக்கப்பட்டவர் 20 ஆண்டுகளுக்கு பின் கைது

Freelancer   / 2024 ஓகஸ்ட் 07 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வங்கியில் கடன் வாங்கி அந்த கடனை செலுத்தாமல் இறந்ததாக அறிவிக்கப்பட்ட ஒருவர் 20 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹைதராபாத் வங்கியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் 50 இலட்ச ரூபாய் கடன் வாங்கிய சலபதி ராவ் என்பவர் மீது வங்கி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் திடீரென 2004ஆம் ஆண்டு தளபதி ராவ் தலைமறைவானதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் 2011ஆம் ஆண்டு தனது கணவர் 7 ஆண்டுகளாக வீடு திரும்பவில்லை என்பதால் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கக்கோரி அவருடைய மனைவி நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொண்டு சலபதி ராவ் இறந்து விட்டதாக அறிவித்தது.

இதனையடுத்து வங்கியில் கடன் வாங்கியவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவருடைய கடன் வழக்கும் முடித்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் சிபிஐ விசாரணை மேற்கொண்டதில் ஹைதராபாத்தில் இருந்து அவர் தமிழகத்திற்கு தப்பி சென்று விட்டதாகவும் அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு இரகசிய வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் தெரியவந்த நிலையில், அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த நிலையில், நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து சலபதி ராவ் மீதான வங்கி மோசடி வழக்கு மீண்டும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .