2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு

Freelancer   / 2025 மார்ச் 31 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில்  3 பெண்கள் உட்பட 6 பேர்  உயிரிழந்துள்ளனர்.

இமாச்சலின் குருத்வாரா மணிகரன் சாகிப் எதிரே இருக்கக்கூடிய குல்லு பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். 

 ஞாயிற்றுக்கிழமை (30), என்பதால் நிறைய சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

இந்த நிலையில் திடீரென அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 3 பெண்கள் உள்பட 6 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

நிலச்சரிவுடன் சேர்ந்து செடிகள் மற்றும் மரங்களும் வேரோடு சாய்ந்ததால் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக சக சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து இந்த நிலச்சரிவை அகற்றக்கூடிய பணியிலும் இதில் சிக்கி இருக்கக்கூடிய நபர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .