2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

”இந்தியாவின் உண்மையான மகன் இன்று இல்லை”: ரஜினி

Janu   / 2024 ஒக்டோபர் 10 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்  புதன்கிழமை(09) இரவு 11 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பல்துறை பிரபலங்கள் தொடங்கி சாமானிய மக்கள் வரை பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில் நடிகர் ரஜினிகாந்த்  தனது எக்ஸ் தளத்தில் இவ்வாறு  பதிவிட்டுள்ளார்.

 “உலக வரைபடத்தில் இந்தியாவை தனது தொலை நோக்குப் பார்வையாலும், ஆர்வத்தாலும் இடம்பிடிக்க வைத்தவர். ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை ஊக்கப்படுத்தியவர், லட்சக்கணக்கான தலைமுறைகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தவர். அனைவராலும் நேசிக்கப்பட்டு, மதிக்கப்பட்ட மனிதர். அந்த சிறந்த மனிதருடன் நான் செலவழித்த ஒவ்வொரு நொடிகளும் போற்றுதலுக்குரியவை. அவருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். இந்தியாவின் உண்மையான மகன் இன்று இல்லை” .

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .