Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Freelancer / 2024 மே 22 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது அங்கு பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
குறிப்பாக இராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, சோளிங்கர், ஆற்காடு, காவேரிப்பாக்கம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
இதன் காரணமாக மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது, இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், திடீர் இடியுடன் கூடிய மழை காரணமாக சோளிங்கர் அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தேவிகா என்ற பெண் இடி தாக்கி உயிர் இழந்தார்.
அதேபோல் சோளிங்கர் அருகே மருதாளம் பகுதியில் தினேஷ் என்பவருக்கு சொந்தமான பசு மாடு இடி தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago