2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

ஆற்றில் படகு கவிழ்ந்து 3 பேர் பலி

Freelancer   / 2025 மார்ச் 16 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தர பிரதேசம் மாநிலம், சீதாப்பூரில் ரத்தன்கஞ்ன் கிராமம் அருகே சாரதா ஆறு பாய்ந்தோடுகிறது. 

ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது 22 வயது இளைஞன் ஒருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.

அவருக்கு இறுதிச்சடங்கு செய்வதற்காக அதே ஆற்றில் இளைஞனின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் பரிசல் படகுகளில் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது அதிக பாரம் காரணமாக பரிசல் நடு ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

2 வயது குழந்தை உட்பட நீரில் மூழ்கி தத்தளித்த 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .