2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஆபாச வீடியோ: மிரட்டிய இன்ஸ்டா காதலன்

Mayu   / 2024 ஜூன் 27 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் கரூர் மாவட்டம் விஜயமங்கலம் அருகே உள்ள வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 27 வயதுடைய விக்னேஷ் எனும் நபருக்கும் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

முதலில் இருவரும் நட்பாக பழகியதால் அவர்களது புகைப்படம் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரிமாறி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.


குறித்த மாணவியை காதல் வலையில் சிக்க வைத்த விக்னேஷ், மாணவியிடம் ஆபாச வீடியோவை எடுத்து அனுப்புமாறும் அதனை  பார்த்தவுடனே அழித்து விடுவேன் எனவும் கூறியுள்ளார்.

மாணவியும் அதற்கினங்க தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் மூலம் விக்னேஷூக்கு அனுப்பியுள்ளார். அதை அலைபேசியில் ஸ்கிரீன் ரெக்கார்டர் மூலம் விக்னேஷ் பதிவு செய்து வைத்துள்ளார்.

அதன்பின்னர் சில நாள் கழித்து தனியாக ஒரு இடத்திற்கு வர வேண்டும், இல்லையென்றால் உனது ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்து விடுவேன் என மிரட்டியதுடன்,
தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்தியுள்ளார்.

இதனால் பயந்துபோன மாணவி தனது தாய் மற்றும் தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் மாணவியின் பெற்றோர் பொலிஸில் முறைபாடு செய்ததையடுத்து குறித்த நபர் பலரிடம் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பில் இருந்தது தெரியவந்த நிலையில் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .