2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

ஆபாச காணொளி வழக்கு ; திவ்யா கள்ளச்சி உட்பட மூவர் கைது

Janu   / 2025 மார்ச் 10 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடலுாரைச் சேர்ந்த 54 வயதுடைய சித்ரா என்பவர் மக்கள் பார்வை என்ற யுடியூப் சேனலை நடத்தி வருகிறார்.

திவ்யா கள்ளச்சி என்ற யுடியூப் சேனல் நடத்தி வரும் தஞ்சாவூரைச் சேர்ந்த 30 வயதுடைய திவ்யா, மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த கீழக்கரை கார்த்திக் என்ற யுடியூப் சேனலை நடத்தி வரும் 30 வயதுடைய  கீழக்கரை கார்த்திக் சேர்ந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் சிறுவர்களை வைத்து ஆபாச காணொளி எடுத்துள்ளதாக, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் சித்ரா புகார் அளித்திருந்தார். அத்துடன் தன்னுடைய வங்கி கணக்கை ஹேக் செய்து  2.5 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட 2 சிறுவர்களிடம் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் விசாரணை நடத்திய போது திவ்யா , மற்றும் கார்த்திக் சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்துாரில் வைத்து சிறுவர்களை பயன்படுத்தி ஆபாச கானொளி எடுத்தமை தெரியவந்துள்ளது

இது தொடர்பில் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் சித்ரா என்பவர் சொல்லி தான் வீடியோ எடுத்ததாக கார்த்திக் கூறியுள்ளார்.

இவர்கள் மீது போக்சோ உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களின் தொலைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது யூடியூபர்களான சித்ரா, கார்த்திக், மற்றும் திவ்யா கள்ளச்சி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .