2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழையால் 27 பேர் பலி

Freelancer   / 2024 செப்டெம்பர் 02 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பில் சிக்கி மொத்தம் 27 பேர் பலியாகியுள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் சில நாட்களாக கனமழை பெய்து வருகின்ற நிலையில், இரு மாநிலங்களிலும் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ரயில், வாகன போக்குவரத்து முடங்கியுள்ளது.

இந்நிலையில், கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி மொத்தமாக 27 பேர் பலியாகியுள்ளனர்.

தெலுங்கானாவில் 15 பேரும், ஆந்திர பிரதேசத்தில் 12 பேரும் உயிரிந்துள்ளனர்.

இதற்கிடையே, வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கித் தவிப்போரை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்து செல்கின்றனர்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .