2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

அவுரங்கசீப் சமாதிக்கு பலத்த பாதுகாப்பு

Freelancer   / 2025 மார்ச் 18 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாராஷ்டிராவில்,  முகலாய மன்னர் அவுரங்கசீப் சமாதியை அகற்றப் போவதாக இந்துத்துவா அமைப்புகள் அறிவித்துள்ளதை தொடர்ந்து, அதற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜியின் வரலாறு ‘சவ்வா’ எனும் பெயரில் திரைப்படமாகி உள்ளது. இது தொடர்பான விவாதம் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுந்தது. 

இதில், பேசிய சமாஜ்வாதி எம்எல்ஏ அபு ஹாஸ்மி, அவுரங்கசீப் நடவடிக்கையை பாராட்டியதுடன், அவரது புகழ் வாழ்க என கோஷமிட்டார். இதனால், மார்ச் 26ஆம் திகதி வரை பேரவை கூட்டத்தொடர் முழுவதும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து சத்ரபதி சம்பாஜி நகரில் இருக்கும் முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் சமாதியை அகற்ற வேண்டும் என்ற வலியுறுத்தல் மீண்டும் எழுந்தது. இதற்கு மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் ஆதரவாகப் பேசினார்.

இந்நிலையில், இதற்காக, விஎச்பி, பஜ்ரங்தளம் சார்பில் மகாராஷ்டிராவில், திங்கட்கிழமை (17) மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது.

 

இதை தொடர்ந்து, அவுரங்சீப் சமாதிக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X