2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஹோலி கொண்டாட அனுமதி

Freelancer   / 2025 மார்ச் 09 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தர பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் (ஏஎம்யு), முதல்முறையாக ஹோலி கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பல்கலைக்கழகமான ஏஎம்யுவில் முஸ்லிம்களின் அனைத்து நிகழ்வுகளும் கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில், ஹோலி கொண்டாடவும் அனுமதி கோரி இந்து மாணவர்கள் சிலர் நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.

இதற்கு நிர்வாகம், ஏற்கெனவே இந்து மாணவர்கள் வளாகத்தில் ஹோலி கொண்டாடுவதாகவும், இதற்காக என தனியாக அனுமதி அளித்து ஒரு புதிய பாரம்பரியத்தை தொடங்க விரும்பவில்லை என்றும் கூறி மறுத்து விட்டனர்.

இதை எதிர்த்து இந்துத்துவா அமைப்பான கர்ணி சேனாவினர் கடந்த 6ஆம் தேதி ஏஎம்யு வாயிலில் போராட்டம் நடத்தியதுடன், இப்பிரச்சினையில் பிரதமர் மோடி தலையிட வலியுறுத்தி டெல்லிக்கு மனு அனுப்பினர்.

இவர்களுக்கு ஆதரவாக பாஜகவின் அலிகர் எம்.பி. சதீஷ் கவுதம், மாநிலங்களவை பாஜக எம்.பி. பிரிஜ் லால் உள்ளிட்டோரும் குரல் கொடுத்தனர். 

 

இந்த நிலையில் ஏஎம்யு நிர்வாகம் நேற்று முதன்முறையாக ஹோலி கொண்டாட அனுமதி அளித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், மார்ச் 13, 14 ஆகிய திகதிகளில் ஏஎம்யுவின் என்ஆர்எஸ்சி அரங்கின் மண்டபம் ஹோலி கொண்டாட திறக்கப்பட்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஏஎம்யு நிர்வாகம் வேறுவழியின்றி முதல்முறையாக இந்த முடிவை எடுத்து இந்துத்துவா அமைப்பினருக்கு பணிந்திருப்பதாக கருதப்படுகிறது.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .