2025 மே 06, செவ்வாய்க்கிழமை

அருணாசலத்தில் பா.ஜனதா அமோக வெற்றி

Mayu   / 2024 ஜூன் 03 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜனதா வேட்பாளர்கள் பத்து பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள 60 சட்டப்பேரவைகளில் 50 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இதற்கமைய, காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளதோடு, என்.பி.பி கட்சி 05 இடங்களிலும், பிற கட்சிகள் 08 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

மேலும், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை தாண்டி வெற்றி பெற்றதால் அருணாசல பிரதேசத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது.

இதேவேளை, அருணாசல பிரதேசத்தில் உள்ள 60 தொகுதிகளில் பா.ஜனதா 46 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், , பிரதமர் மோடி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- மாநிலத்தின் வளர்ச்சிக்கு தெளிவான முடிவை மக்கள் வழங்கியுள்ளார்கள். மக்கள் நலன் மற்றும் மாநில வளர்ச்சிக்காக பா.ஜனதா இன்னும் அதிக வீரியத்துடன் பாடுபடும்" என்று பதிவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X