Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2025 மார்ச் 20 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை அகற்றிய நிலையில், அரியானா மற்றும் பஞ்சாப்பை ஒட்டிய ஷம்பு எல்லை பகுதியில், வியாழக்கிழமை (20) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அரியானா மற்றும் பஞ்சாப்பை ஒட்டிய ஷம்பு எல்லை பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்நிலையில், பஞ்சாப் பொலிஸார், புதன்கிழமை (19) மாலை, அந்த பகுதிக்கு சென்று போக்குவரத்துக்கு தடையாக இருந்த தடுப்பான்களை அகற்றினர். புல்டோசர்களை கொண்டும் அவற்றை இடித்து தள்ளினர்.
அவற்றுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளையும் அகற்றினர்.
எனினும், இதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு கொடுத்தனர் என்றும் அவர்களை கட்டாயப்படுத்தி அகற்றவில்லை என பாட்டியாலா சிறப்பு பொலிஸ் அதிகாரி நானக் சிங் கூறினார்.
இதனால், நெடுஞ்சாலை மீண்டும் போக்குவரத்துக்கு தயார் செய்யப்பட்டு உள்ளது.
அதேவேளையில், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள முக்கிய விவசாய தலைவர்களான ஜெகஜீத் சிங் தல்லேவால், சர்வன் சிங் பாந்தர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பஞ்சாப்பில் ஆளும் ஆம் ஆத்மி தலைமையிலான அரசின் இந்த முடிவுக்கு விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகாயத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அனைத்து அமைப்புகளும் போராட்டத்திற்கு தயாராக உள்ளன என கூறியுள்ளார். இதனால், எல்லையில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து ஷம்பு எல்லையில், வியாழக்கிழமை (20) காலை அதிக அளவில் பொலிஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago