2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

அரசு பள்ளியில் ’கோட்’, ‘வேட்டையன்’ திரையிடல்

Freelancer   / 2024 நவம்பர் 13 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் வி.கே.புரத்தில் உள்ள அரசு உதவிபெறும் பெண்கள் பள்ளியில், விஜய் நடித்த ‘கோட்’ மற்றும் ரஜினி நடித்த ‘வேட்டையன்’ திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

கடந்த 9ஆம் திகதியன்று இடம்பெற்ற இச்சம்பவத்தில்,  6 முதல் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்காக, நடிகர் விஜய் நடித்த ‘கோட்’ படம் திரையிடப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்காக நடிகர் ரஜினி நடித்த ‘வேட்டையன்’ படம் திரையிடப்பட்டுள்ளது.

இதற்காக விஜய் படத்துக்கு தலா ரூ.25, ரஜினி படத்துக்கு தலா ரூ.10 வீதம் மாணவிகளிடம் கட்டாயமாக வசூலிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

எனினும், பெற்றோர் தரப்பில் புகார்கள் தெரிவிக்கப்படவில்லை. 

இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார் உத்தரவின்பேரில், கல்வித் துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர்.

இது குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் கூறும்போது, ‘‘மாணவிகளுக்கு மனதளவிலான அழுத்தத்தைத் குறைப்பதற்காக படங்கள் திரையிடப்பட்டதாக பள்ளி தலைமை ஆசிரியை தெரிவித்தார். 

“இந்த விளக்கத்தை தொடர்ந்து, மாணவிகளிடம் வசூலிக்கப்பட்ட தொகையை திருப்பிக் கொடுக்க பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்’’ என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X