2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

அரச வைத்தியசாலையில் தீ விபத்து: 11 குழந்தைகள் பலி

Freelancer   / 2024 நவம்பர் 18 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தர பிரதேசம் -  ஜான்சியில் உள்ள மகாராணி லட்சுமிபாய் கல்லூரியின் பிறந்த குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில், கடந்த வெள்ளிக்கிழமை (15) இரவு 10.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. 

இதில் 11 குழந்தைகள் உயிரிழந்த்துடன். 16 குழந்தைகள் படுகாயமடைந்ந நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இதற்கான காரணத்தை கண்டறிய சிறப்பு பொலிஸ் குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவின் விசாரணையில், “இது திட்டமிட்ட நடத்தப்பட்ட சம்பவம் அல்ல. தன்னிச்சையாக நடந்த ஒரு விபத்து. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதுள்ளது.

“ குழந்தைகள் வார்டில் ஸ்பிரிங்லர்கள் பொருத்தப்படாததால், தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை” என்று கண்டறியப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. 

விசாரணைக் குழுவின் விரிவான அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X