Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 02, புதன்கிழமை
Freelancer / 2025 மார்ச் 05 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
அயோத்தி இராமர் கோயிலை குண்டு வீசி தகர்க்க எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பே, இந்த சதி செயலை செய்ய திட்டமிட்டிருந்ததாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த . இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து 2 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அயோத்தி இராமர் கோயில் கட்டப்பட்டு பிரபலம் அடைந்துள்ளதால், இங்கு தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஐஎஸ்ஐ சதி செய்கிறது.
அயோத்தி ராமர் கோயிலில் தாக்குதல் நடத்துவதற்காக, அயோத்தி மாவட்டத்தின் பைசாபாத் நகரின் மில்கிபூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் அபுபக்கர் (19) என்ற இளைஞரை பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பினர் தேர்வு செய்துள்ளனர்.
இவர் ஹரியானாவின் பரிதாபாத்தில் சங்கர் என்ற பெயரில், உணவு விடுதி ஒன்றில் பணியாற்றுகிறார். பகுதி நேர தொழிலாக முச்சக்கர வண்டி ஓட்டி வருகிறார்.
அயோத்தி ராமர் கோயில், உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் ஆகியவற்றை உளவு பார்க்கும் பணி அப்துல் ரகுமானுக்கு வழங்கப்பட்டது. இவருக்கு தீவிரவாத அமைப்பின் வலையமைப்பின் ஒன்றின் மூலம் இரண்டு கையெறி குண்டுகளை பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பினர் வழங்கியுள்ளனர்.
இது குறித்த தகவல் குஜராத் பொலிஸாரின் தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு கிடைத்தது. அவர்கள் ஹரியானா சிறப்பு படை பொலிஸாருடன் இணைந்து அப்துல் ரகுமானை பரிதாபாத்தில் வைத்து கைது செய்தனர்.
அவர் தங்கியிருந்த வீட்டில் ஒரு பென் டிரைவ் மீட்கப்பட்டது. அதில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள இடங்களின் வரைபடம், தாக்குதல் நடத்துபவர்களுக்கான அறிவுறுத்தல்கள் ஆகியவை இருந்தன.
இத்தகவல்களை ஆராய்ந்த போது விரைவில் அயோத்தி இராமர் கோயில் மீது குண்டு வீச்சு தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது. அங்கு இரண்டு கையெறி குண்டுகளும் மீட்கப்பட்டு செயல் இழக்கச் செய்யப்பட்டது.
மேலும், அயோத்தி கோயிலை தகர்க்க சதி நடந்ததாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த ராஜஸ்தானை சேர்ந்த ரயில்வே ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்ட அதிர்ச்சி செய்தியும் வெளியாகியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago
5 hours ago