2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

அம்பானி இல்லத் திருமணம் என்ன பொது நிகழ்ச்சியா?

Editorial   / 2024 ஜூலை 12 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் வெள்ளிக்கிழமை (12)  நடைபெறுவதையொட்டி, மும்பையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மும்பை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பொது நிகழ்ச்சி’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவழியாக பல்வேறு கொண்டாட்டங்களுக்கும், சடங்குகளுக்கும் பின்னர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சண்ட் தம்பதிகளின் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் (Jio World Convention Centre) வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த திருமணத்தில் பல்வேறு மாநில முதல்வர்களும், உலக தலைவர்களும், பாலிவுட் பிரபலங்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இதனையொட்டி, மும்பை போக்குவரத்து காவல் துறை நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தது.

இதில் முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்தை ‘பொது நிகழ்ச்சி’ என காவல் துறை குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை நெட்டிசன்கள் உள்ளிட்ட பலரும் விமர்சித்து வருகின்றனர். “பொது நிகழ்ச்சி என்றால், சாதாரண மும்பைவாசி இந்நிகழ்வில் அனுமதிக்கப்படுவாரா?” என பெரும்பாலானோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X