2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

அதிமுக, பாஜக-வை பின்னுக்குத் தள்ளிய நாம் தமிழர் கட்சி

Freelancer   / 2024 ஜூன் 05 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அதிமுக, பாஜக வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி 6 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 3ஆவது இடத்தை தக்கவைத்துள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி, மற்ற கட்சிகளை பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 19இல் தேர்தல் நடந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பாஜக வேட்பாளர்கள் யாரும் எந்த தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை. கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை, நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன், தென் சென்னையில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன், நெல்லையில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

என்றாலும், இந்தத் தேர்தலின் வாக்கு சதவிகிதத்தைப் பார்க்கும்போது தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயமும் உள்ளது. அதாவது, தமிழகத்தில் 5 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் 3வது இடத்தில் உள்ளனர்.

அதன்படி புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, ஈரோடு, நாகை, திருச்சி ஆகிய 6 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் 3வது இடத்தில் உள்ளனர்.

இந்த தொகுதிகளில் அதிமுக, பாஜக வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி சீமானின் நாம் தமிழர் வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .