2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

அதிக சொத்து சேர்த்தவர்களில் அதானிக்கு முதலிடம்

Freelancer   / 2024 ஒக்டோபர் 13 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் பணக்காரர் பட்டியலை அமெரிக்காவின் பிரபல ஃபோர்ப்ஸ் [Forbes] இதழ் வெளியிட்டுள்ளது.

 ஒக்டோபர் 9ஆம் தேதி வெளியான அந்த பட்டியலின்படி, 2024 ஆம் ஆண்டில் 100 இந்தியப் பணக்காரர்களில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்டவற்றின் சொந்தக்காரரான அம்பானி, நடப்பு ஆண்டில் 27.5 பில்லியன் டாலர்கள் வரை கூடுதலாக சொத்து சேர்த்துள்ளார். எனவே அவரின் சொத்துமதிப்பு தற்போது 119.5 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. 

எனவே, உலகப் பணக்காரர் பட்டியலில் அம்பானிக்கு 13ஆவது இடம். அதற்கு அடுத்தபடியாக 116 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்துமதிப்புடன் அதானி குழும நிறுவனர் கௌதம் அதானி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

மொத்த மதிப்பில் அம்பானிக்கு அடுத்தபடியாக இருந்தாலும், கடந்த ஒரே ஆண்டில் அதிக சொத்து சேர்த்ததில் அம்பானியை அதானி பின்னுக்குத்தள்ளியுள்ளார். அதாவது, அதானி கடந்த ஒரே ஆண்டில் 48 பில்லியன் டொலர்கள் சொத்து சேர்ந்துள்ளார்.

இது அம்பானி கடந்த ஒரே ஆண்டில் சேர்த்த சொத்தை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும். எனவே பணக்காரர் பட்டியலில் முதலிடத்தை நோக்கி அதானி முன்னேறி வருகிறார் என்றே இதன்மூலம் புலனாகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X