Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2024 ஜூன் 05 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோவை பாராளுமன்றத் தொகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தோற்றதால், மக்கள் அனைவருக்கும் ஆடு பிரியாணியை திமுகவினர் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுகவினர் ஆடு என்ற பட்டப்பெயரை வைத்துள்ளனர். ஒரு முறை அண்ணாமலையிடம் நிருபர்கள், "உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது" எனக் கேட்டதற்கு, "என்னிடம் இரண்டு ஆடுகள் மட்டும்தான் இருக்கின்றன. சொந்தமாக வீடு கூட கிடையாது" எனக் கூறினார் அண்ணாமலை. அதிலிருந்து அவரை ஆடு என்று திமுகவினர் கிண்டல் செய்து வருகிறார்கள்.
இந்த சூழலில், கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிட்டார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலாகவே, அத்தொகுதியில் பிரச்சாரத்திற்கு போகும் திமுகவினர், கையில் ஆட்டுக்குட்டியுடன் செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். மேலும், கோவையில் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் நாளில், ஆடு (அண்ணாமலை) பிரியாணி ஆகிவிடும் என்றும், அதை மக்களுக்கு வழங்குவோம் எனவும் திமுகவினர் கூறி வந்தனர்.
அந்த வகையில், ஆரம்பம் முதலாகவே, பாஜக வேட்பாளர் அண்ணாமலை பின்னடைவை சந்தித்தே வந்தார். பின்னர் மாலை 6 மணியளவில் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், 4,18,825 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் அண்ணாமலை 3,34,695 வாக்குகளை பெற்று 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
அண்ணாமலை தோற்றதாக அறிவிக்கப்பட்ட அடுத்த கணமே, தாங்கள் கொண்டு வந்திருந்த மட்டன் பிரியாணையை அங்கிருந்த பொதுமக்களுக்கு திமுகவினர் சுடச்சுட வழங்கினர். "வாங்கிக்கோங்க.. ஆடு பிரியாணி போடப்பட்டது" எனக் கூவி கூவி அவர்கள் பிரியாணி வழங்கினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago